#ELECTIONBREAKING: போடி தொகுதியில் ஒ.பன்னீர்செல்வம் VS தங்க தமிழ்ச்செல்வன்..!
போடி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.
திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில், போடி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டிடவுள்ளதாக அறிவித்தார். இதற்கு முன் கடந்த 05-ஆம் தேதி அதிமுக சார்பில் வெளியான வேட்பாளர் பட்டியலில் போடி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், போடி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.