#ElectionBreaking: தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்.!
தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் சரியாக 11 மணியளவில் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் ஏப்.6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் பிரச்சாரம் மேற்கொள்வதிலும் தீவிரம் காட்டி வரும் நிலையில், இன்று முதல் காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனு தாக்கல் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் சரியாக 11 மணியளவில் தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று தொடங்கி வரும் 19ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சனி, ஞாயிறை தவிர வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளனர்.
மேலும் வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 5 பேருக்கு பதில் 2 பேர் மட்டுமே வர அனுமதி வழங்கியுள்ளது. இதுபோன்று, வேட்பு மனு தாக்களுக்காக 5க்கு பதில் 2 வாகனங்களை மட்டுமே பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான டெபாசிட் தொகை ரூ.5,000, மற்றவர்களுக்கு ரூ.10,000 என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.