மூளைச்சாவு அடைந்த பேராண்மை பட இயக்குனர்…! தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!
இயற்கை, பேராண்மை போன்ற படங்களை இயக்கிய தமிழ் திரைப்பட இயக்குனரான எஸ்.பி.ஜனநாதன் மூளைச்சாவு அடைந்துள்ளார்.
இயற்கை, பேராண்மை போன்ற படங்களை இயக்கிய தமிழ் திரைப்பட இயக்குனரான எஸ்.பி.ஜனநாதன் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதனையடுத்து, இவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜனநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தித்து வாருகின்றனர். இவர் விஜய்சேதுபதி-ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகும் லாபம் படத்தை இயக்கி வந்த நிலையில், இவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.