#ElectionBreaking:திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு.
திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழக தேர்தல் களம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துள்ளது.திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தனது கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்று ஒதுக்கிய நிலையில் எந்த தொகுதி யாருக்கு பங்கீடு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.இதில் அதிமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதில் திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்க நீண்ட இழுபறிக்கு பின்னர் 6 இடங்கள் முடிவானது.
தற்பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் எவை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.அவை திருப்பரங்குன்றம், கந்தர்வகோட்டை, திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர், கீழ்வேளூர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டுள்ளனர்.
திமுக அணியில் #CPIM போட்டியிடும் தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது.
1. கோவில்பட்டி
2. திருப்பரங்குன்றம்
3. திண்டுக்கல்
4. கந்தர்வக்கோட்டை (தனி)
5. அரூர் (தனி)
6. கீழ்வேளூர் (தனி)
ஆட்சி மாற்றம் நிகழட்டும்!
தமிழகம் தலை நிமிரட்டும்!#DefeatADMKBJP #SaveTamilnadu pic.twitter.com/IWihL6nIkw— CPIM Tamilnadu (@tncpim) March 11, 2021