#BREAKING: தொகுதி பங்கீடு.. பேச்சுவார்த்தையில் அதிமுக ,பாஜக ..!
அதிமுக பொறுப்பாளர் தமிழக அமைச்சர் எம்.சி சம்பத், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடம் கூட்டணி குறித்த உடன்பாடு நடைபெற்றது. அதில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக- அதிமுக கூட்டணியில் வருகின்ற தேர்தலை சந்திக்க உள்ளனர் எனவும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக- அதிமுக -14 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ரங்கசாமி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து,வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி மாநில அதிமுக பொறுப்பாளர் தமிழக அமைச்சர் எம்.சி சம்பத், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.