#Election Breaking: வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு.. நாளை மாலை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர்!
அதிமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மாலை முதல் மீண்டும் தனது தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி முதல் அதிமுக விருப்ப மனுக்களை வழங்க தொடங்கி மார்ச் 3-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்க்கப்பட்டது. இதில் 8,200 பேர் விருப்பமனுக்கள் அளித்தனர். அவர்களிடம் ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்தது.
இதனால் கடந்த 5-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 6 பேரின் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. அதனைதொடர்ந்து அதிமுக, நேற்று 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக போட்டியிடம் தொகுதிகளையும் அதிமுக வெளியிட்டது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மற்றும் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை மாலை முதல் மீண்டும் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளார். அதன்படி, சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தனது பரப்புரையை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.