அம்மையார் மம்தா மீதான தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் வெட்கித் தலைகுனியச் செய்கிறது – சீமான்
மம்தா எனர்ஜி மீதான தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்து, வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் நந்திகிராம் பகுதியில் தேர்தல் பரப்புரைக்கு பின் காரை நோக்கி செல்லும் போது 4-5 பேர் அவரை தள்ளி விட்டதாகவும், இதனால் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளார். இது, அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து மம்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இடுப்பு மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு எக்ஸ்ட்ரெ எடுத்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மம்தாவுக்கு சிகிச்சையளிக்க 5 மருத்துவர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘மேற்கு வங்காளத்தில் தேர்தல் பரப்புரைக்காக நந்திகிராம் தொகுதிக்குச் சென்ற அம்மையார் மம்தா பானர்ஜி அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஒரு மாநிலத்தின் முதல்வர் மீதே துணிந்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் கொடுங்கோலர்களின் இப்போக்கு, நாடு எத்தகைய அசாதாரண நிலையில் இருக்கிறது என்பதைத் தெளிவாக வெளிக்காட்டுகிறது.
சனநாயகத்திற்கு சவால் விடக்கூடிய வகையில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் வெட்கித் தலைகுனியச் செய்கிறது. அம்மையார் மம்தா மீதான இத்தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது என பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் தேர்தல் பரப்புரைக்காக நந்திகிராம் தொகுதிக்குச் சென்ற அம்மையார் மம்தா பானர்ஜி அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
(1/3)
— சீமான் (@SeemanOfficial) March 11, 2021
ஒரு மாநிலத்தின் முதல்வர் மீதே துணிந்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் கொடுங்கோலர்களின் இப்போக்கு, நாடு எத்தகைய அசாதாரண நிலையில் இருக்கிறது என்பதைத் தெளிவாக வெளிக்காட்டுகிறது.
(2/3)
— சீமான் (@SeemanOfficial) March 11, 2021
சனநாயகத்திற்கு சவால் விடக்கூடிய வகையில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் வெட்கித் தலைகுனியச் செய்கிறது. அம்மையார் மம்தா மீதான இத்தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது.
(3/3)
— சீமான் (@SeemanOfficial) March 11, 2021