#ELECTIONBREAKING: பார்வார்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு..!

Default Image

திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எந்தந்த தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும்  பார்வார்டு பிளாக் கட்சி தலைவர் கதிரவன் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்திய பார்வார்டு பிளாக் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே திமுக கூட்டணி கட்சிகளுக்கு மொத்தமாக 60 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்