மகளீர் தினத்தன்று செய்தி வாசிப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட முதல் திருநங்கை…!

Default Image

வங்க தேசத்தில், மகளீர் தினத்தன்று, செய்தி வாசிப்பாளராக முதன் முதலாக தாஷ்ணுவா அனன் ஷிஷிர் என்ற திருநங்கை  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

திருநங்கைகள் என்றாலே வித்தியாசமான பார்வையுடன் பார்க்கப்படும் இந்த சமூகத்தில், இன்று திருநங்கைகள் பல துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர். சினிமா துறை, மருத்துவ துறை, கல்வி துறை, ஊடக துறை, காவல்துறை என அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.

அந்த வகையில், வங்க தேசத்தில், மகளீர் தினத்தன்று, செய்தி வாசிப்பாளராக முதன் முதலாக தாஷ்ணுவா அனன் ஷிஷிர் என்ற திருநங்கை  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இந்த திருநங்கை குடிபெயர்ந்தவர்களுக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து வரும் நிலையில், இவரது இந்த சாதனைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இவர் முதன்முதலாக 3 நிமிடம் செய்தி வாசித்த பின் கதறி அழுதுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், திருநங்கை என்பதால், சிறுவயது முதலே பல கொடுமைகளை அனுபவித்தேன். ஆனால் இன்று திருநங்கையாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்