கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது…! – கீதா கோபிநாத்
சர்வதேச செலவாணி நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், இந்தியாவின் கொரோன தடுப்பூசி கொள்கை மிகச் சிறப்பாக உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸை தடுக்க தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கோவீஷீல்டு, கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதுகுறித்து சர்வதேச செலவாணி நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் அவர்கள் கூறுகையில், உலகில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கும் மையம் எதுவென்று பார்த்தால், அது இந்தியா தான். இந்தியாவின் கொரோன தடுப்பூசி கொள்கை மிகச் சிறப்பாக உள்ளது. கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்வதில், இந்தியா முன்னிலை வகிப்பதாகவும், தனது தடுப்பூசி கொள்கைகள் மூலம் உலக நாடுகளுக்கு உதவுவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.