தாமதமாகும் OTP.., சிக்கி தவிக்கும் மக்கள்.. TRAI-யின் புதிய விதிமுறையா..?
எஸ்எம்எஸ் சேவைகளில் தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக, பல பயனர்கள் நிறைய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக, வங்கிகள், ஈ-காமர்ஸ் தளங்களுக்கான OTP போன்ற முக்கியமான செய்திகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதன் காரணமாக, டெபிட் கார்டு பரிவர்த்தனைகளில் சிக்கல்கள் இருப்பது மட்டுமல்லாமல், கோ-வின் (CoWin) ஆப்பில் பதிவு செய்வதற்கான சிக்கல்களையும் மக்கள் எதிர்கொள்கின்றனர். OTP ஐப் பெறுவதில் சிரமத்திற்கு உண்மையான காரணம் TRAI (இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) வழங்கிய புதிய வழிகாட்டுதல்கள் ஆகும்.
OTP மோசடியைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக TRAI ஒரு புதிய எஸ்எம்எஸ் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது OTP சேவையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பயனாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். புதிய எஸ்எம்எஸ் விதிமுறைகள் எஸ்எம்எஸ் மோசடியைத் தடுக்க கொண்டு வரப்பட்டுள்ளது என்று தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தொழில் வல்லுநர்களின் கூற்றுப்படி, தொலைத் தொடர்புத்துறை ஆப்ரேட்டர்கள் டிராய் அறிவித்த புதிய விநியோகிக்கப்பட்ட லேசர் தொழில்நுட்பத்தை (டிஎல்டி) செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது OTP அறிவிப்புகளை பாதித்துள்ளது. டி.எல்.டி என்பது பிளாக்செயினை அடிப்படையாகக் கொண்ட ஒரு பதிவு முறை.டிராய் அனைத்து டெலிமார்க்கெட்டர்களையும் டி.எல்.டி இயங்குதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கியுள்ளது.
இப்போது அது செயல்படுத்தப்பட்டதால், சில தொலைத் தொடர்புத்துறை நிறுவனங்கள் தங்களது முக்கியமான செய்திகள் அல்லது OTP-கள் எதுவும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தாமதமாக வழங்கிறது என கூறப்படுகிறது.