கோப்ரா படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.?
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தினை மே 4-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் ஏழு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் உருவாகும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் மும்மரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தற்போது கோப்ரா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது விக்ரம் ஏழு வேடங்களில் நடித்துள்ள கோப்ரா படத்தினை மே 4-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.