இன்று பேச்சுவார்த்தை.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள்..?
திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள்..? என்பது குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொடர் இழுபறி நீடித்து வந்தநிலையில் இறுதியாக திமுக 6 தொகுதிகளை ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதிகள் ஒதுக்கீடு செய்து அதற்கான உடன்பாடு கையெழுத்தானது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள்..? என்பது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் குழு ஆலோசனையில் பங்கேற்க உள்ளது. 9 விருப்ப தொகுதிகளை அளித்து அதில் 6 தொகுதிகளை கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.