இந்தியாவும் சீனாவும் நண்பர்கள் தான்…! எதிரிகள் அல்ல…! – சீன வெளியுறவுத்துறை அமைச்சகம்
பேச்சுவார்த்தைக்கு திரும்புவதே சரியான வழி. இந்தியாவும் சீனாவும் நண்பர்கள் தான், எதிரிகள் அல்ல.
கிழக்கு லடாக்கில் நடைபெற்ற வன்முறை காரணமாக, சீனா – இந்திய இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையின் போது, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். அதன் பின், சீன தயாரிப்புகள் மற்றும் சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதன்பின் இருநாடுகளும் தங்களது படைகள் விலக்கி கொண்டனர்.
இந்நிலையில், சீன வெளியுறவு துறை அமைச்சகம், இந்தியாவும் சீனாவும் நண்பர்கள் தான், எதிரிகள் அல்ல என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், ஹுவா சுனிங் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், எந்த பிரச்சனையையும் இந்தியா-சீனா மோதலால் தீர்க்க முடியாது. பேச்சுவார்த்தைக்கு திரும்புவதே சரியான வழி என்றும், இந்தியாவும் சீனாவும் நண்பர்கள் தான், எதிரிகள் அல்ல என்றும், இருவருமே வெற்றி பெற ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.