எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் முழக்கத்தால்..,மாநிலங்களவை ஒத்திவைப்பு..!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் முழக்கத்தால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் அமர்வு ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ஆம் தேதி வரையிலும், 2-வது அமர்வு மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது.
அப்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கத்தால் மாநிலங்களவை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.