ஸ்டாலின் முதல்வராகி ஜனநாயகத்தை காக்கும் புனித போரை தொடங்குவார் – துரைமுருகன்
மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகி ஜனநாயகத்தை காக்கும் புனித போரை தொடங்குவார்.
திருச்சி சிறுகனூரில், திமுக சார்பில் ‘விடியலுக்கான முழக்கம்’ பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது பிரமாண்டமான முறையில் தயார் செய்யப்பட்டிருந்த நிலையில்,இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொடியை ஏற்றி கூட்டத்தை வைத்தார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துரைமுருகன் அவர்கள், என் வாழ்நாளில் பார்த்திராத பிரம்மாண்ட மக்கள் கூட்டத்தை பார்க்கிறேன். மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகி ஜனநாயகத்தை காக்கும் புனித போரை தொடங்குவார் என தெரிவித்துள்ளார்.