எனது நண்பர்களுக்காகதான் உழைக்கிறேன்; தொடர்ந்து உழைப்பேன்-மோடி..!
வறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள்; அவர்களுக்காகதான் உழைக்கிறேன் தொடர்ந்து உழைப்பேன் என மோடி தெரிவித்தார்.
கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வங்காள மக்கள் மாற்றத்திற்கான நம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடவில்லை. அடுத்த 5 ஆண்டுகளில் வங்காளத்தின் வளர்ச்சியானது அடுத்த 25 ஆண்டுக்கான வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் திரிணாமுல் காங்கிரஸால் மேற்கு வங்க மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர முடிந்ததா..? நான் நண்பர்களுக்காக உழைப்பதாக எதிர்க்கட்சியினர் கூறுவது உண்மைதான். வறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள்; அவர்களுக்காகதான் உழைக்கிறேன் தொடர்ந்து உழைப்பேன் என தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு, நீங்கள் (மம்தா பானர்ஜி) ஒரு ஸ்கூட்டியில் சென்றபோது, நீங்கள் காயமடைய வேண்டாம் என்று எல்லோரும் ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். நீங்கள் விழவில்லை என்பது நல்லது. இல்லையெனில், ஸ்கூட்டி தயாரிக்கப்பட்ட மாநிலத்தை நீங்கள் எதிரியாக மாற்றியிருப்பீர்கள் என மோடி தெரிவித்தார்.
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, சமீபத்தில் மின்சார ஸ்கூட்டரில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.