முதல்வர், துணை முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம் கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த திரு எதிர்க்கோட்டை S.G சுப்பிரமணியன்( சாத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) தனது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்பு கோரி தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டி கேட்டுக் கொண்டதால் இன்று முதல் உறுப்பினராக கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.