தாமரையும் எங்களது தான், இரட்டை இலையும் எங்களது தான் – சி.டி.ரவி

தாமரையும் எங்களது தான், இரட்டை இலையும் எங்களது தான் என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தேசிய கட்சியான தாமரையும் எங்களது தான், கூட்டணியில் இருக்கும் இரட்டை இலையும் எங்களது தான், மாம்பழமும் எங்களது தான் தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் தேசிய கட்சி கூட்டணியில் இருக்கும் அனைத்து சின்னமும் எங்களது தான் என குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தேசிய கட்சி என்பதால் ஆங்கிலம் மற்றும் இந்திக்கு தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. தேசிய அளவில் இந்தி, ஆங்கிலம் தான் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் நாம் தமிழ் பயன்படுத்துகிறோம். ஆகையால், வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய கட்சியில் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகள் பாகுபாடு இன்றி இணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்த வந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, பாஜகவுக்கு 20 தொகுதிகள் மற்றும் ஒரு கன்னியாகுமரி மக்களவை சீட்டு வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மக்களவையில் இடைத்தேர்தலில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்