செம ஸ்டைலிஷ் லுக்கில் தனுஷ்.! இதுவா ‘தி க்ரே மேன்’ பட கெட்டப்.!
தி க்ரே மேன் படத்தில் நடித்து வரும் தனுஷின் புது லுக் என்று கூறி தனுஷின் புது புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து முடித்த இவர் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் “D43” படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தார்.
அதன் பின் தனுஷ்தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.மார்க் க்ரேனியின் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட உள்ள ‘தி க்ரே மேன்’ படத்தினை அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ இயக்கவுள்ளனர். ஓடிடி தளமான நெட் ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ள இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து பிரபல ஹாலிவுட் ஹீரோக்களான ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். ஆக்ஷன் திரில்லராக உருவாகவுள்ள இந்த படத்தில் ரயான் கோஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற சிஐஏ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் ,அவரை பணத்திற்காக கொலை செய்யவிருக்கும் கூட்டத்தின் தலைவனாக தனுஷ் நடிக்க உள்ளதாகவும் மார்க் க்ரேனி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
சமீபத்தில் படப்பிடிப்பினை தொடங்கியதாக கூறப்பட்ட தி க்ரே மேன் படத்திலுள்ள தனுஷின் கெட்டப் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.மீசை,தாடி என செம ஸ்டைலிஷ் லுக்கில் உள்ள தனுஷின் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
Our chief @dhanushkraja recent pic ????????#KarnanTeaser #Karnan pic.twitter.com/Lh4j8ASPUL
— Pollathavan memes™ (@PollathavanMeme) March 4, 2021