INDvsENG: இந்திய அணி ஆல் அவுட்…160 ரன்கள் முன்னிலை..!
இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 365 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்கத்தில் இருந்து தடுமாறி விளையாடி வந்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 75.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 205 ரன்கள் எடுத்தனர்.
இதில் இந்திய அணியில் அக்ஸர் 4, அஸ்வின் 3, சிராஜ் 2, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 365 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 160 ரன்கள் முன்னிலையில் உள்ளது. அதிகபட்சமாக இந்திய அணியில் ரிஷப் பண்ட் 101 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 96* ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்றார்.
இதில் இங்கிலாந்து அணியில், ஜேம்ஸ் ஸ்டோக்ஸ் 4, ஆண்டர்சன் 3, ஜாக் லீச் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்நிலையில், இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சிஸை தொடங்கியுள்ளது.