தனது குதிரையின் 2-வது பிறந்தநாளை 22 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய நபர்…!
குதிரையின் 2-வது பிறந்தநாளை 22 கிலோ கேக் வெட்டி, அனைவருக்கு விருந்தளித்து பிரமாண்டமாக கொண்டாடிய இளைஞர்.
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்களது பிறாந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடுவதுண்டு. ஆனால், சிலர் தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் பூனை, நாய் மற்றும் குதிரை போன்ற விலங்குகளின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதுண்டு.
அந்த வகையில், பீகாரில் ஒரு இளைஞர் தான் செல்லமாக குழந்தையை போல வளர்க்கும் குதிரையின் 2-வது பிறந்தநாளை 22 கிலோ கேக் வெட்டி, ஊர் மக்கள் அனைவருக்கு விருந்தளித்து பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.