#BREAKING: நாளை மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழைத்த திமுக..!
தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நாளை காலை வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை திமுக அழைத்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுள்ளது. ஆனால், 6 தொகுதிகள் வரை வழங்க திமுக முன்வந்த நிலையில் திமுக -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், நாளை காலை தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை திமுக அழைத்துள்ளது. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து அதற்கான உடன்பாடு கையெழுத்தானது.
ஏற்கனவே, திமுக கூட்டணியில் விசிக 6, ஐயூஎம்எல் 3, மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுகவில் இடப்பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்படுகிறது தவிர கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை என கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.