கடைசி டெஸ்ட் போட்டியில்.., சதம் விளாசிய ரிஷப் பண்ட்.!

Default Image

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் சதம் விளாசினார்.

இந்திய -இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடைசி டெஸ்ட்போட்டி தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடிமைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி 75.5 ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 205 ரன்கள் எடுத்தனர்.

இதைதொடர்ந்து, இந்திய அணி களமிறங்கியது நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்தனர். பின்னர், இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்திய அணி விக்கெட்டை இழந்து வந்த நிலையில், ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 118 பந்தில் 101 ரன்கள் குவித்தார்.

இதில், 13 பவுண்டரி ,2 சிக்ஸர் அடங்கும். தற்போது இந்திய அணி 7 விக்கெட்டை இழந்து 276 ரன்கள் எடுத்து 71 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. களத்தில் வாஷிங்டன் சுந்தர் 51*, அக்ஸர் படேல் 6* ரன்களுடன் விளையாடி வருகின்றனர். ஏற்கனவே நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்