ராம் சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே.!எந்த படத்தில் தெரியுமா .?
சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடித்து வரும் ஆச்சார்யா படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 152வது படமான ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து வருகிறார். கொரட்லா சிவா இயக்கும் இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் ராம்சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருள்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராம் சரணும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் மூலம் ராம் சரண் மற்றும் சிரஞ்சீவி முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.சித்தா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் ராம் சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராஜமுந்திரி பகுதியில் சமீப காலமாக நடைபெற்று வரும் ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பில் நேற்று முன்தினம் முதல் பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.