#ELECTION BREAKING: கன்னியாகுமரி இடைத்தேர்தல்., பிரியங்கா காந்தி போட்டியிட விருப்ப மனு..!

கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்ப மனுவை சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்தார்.
கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோர் மார்ச் 5 வரை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அறிவித்துதிருந்தார்.
இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்ப மனுவை சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்தார். இதற்கு முன் மறைந்த வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடம் காலியாகவுள்ளது. அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுடன் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025