மீண்டும் கவர்ச்சியாக களமிறங்கிய மம்பட்டியான் பட நாயகி..!
போக்கிரி, கந்தசாமி, மம்பட்டியான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்திருப்பதுடன் குத்துபாடல்களுக்கும் நடனம் ஆடியிருப்பவர் முமைத்கான். கடந்த 2 வருடமாகவே நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார்.
மேலும் போதை மருந்து சர்ச்சையிலும் சிக்கினார். உடல் எடை அதிகரித்த நிலையில் வெளியில் தலைகாட்டாமல் இருந்தவர் திடீரென்று தனது இணைய தள பக்கத்தில் 2 வருடத்துக்கு முன் 2 வருடத்துக்கு பின் என இரண்டு புகைப்படங்கள் வெளியிட்டிருக்கிறார்.
2 வருடத்துக்கு முன்பு குண்டாகவும் தற்போது ஒல்லியாகவும் அதில் தோற்றம அளிக்கிறார்.
இதுபற்றி முமைத்கான் கூறும்போது,’உடல் எடையை எப்படி குறைத்தீர்கள் என்கிறார்கள். பொருத்தமான இந்திய உணவை தகுந்த நேரத்தில் சாப்பிட்டு உடல் எடையை குறைத்திருக்கிறேன்.
புரோட்டின் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் உணவை குறைவாகவும் சாப்பிட்டதுடன் தினமும் 8 மணி நேரம் தூங்கி ஓய்வு எடுத்தால் ஆரோக்கியமாக இருக்க முடியும். நான் அனைவருக்கும் சொல்லும் ஒரு விஷயம் என்னவென்றால், உங்களிடம் இதை எதிர்பார்க்கிறேன் என்று மற்றவர்கள் கூறுவதை நீங்கள் காதில் வாங்காதீர்கள்’ என்றார்.