#Cricket Breaking: டக் அவுட் ஆன விராட் கோலி; தடுமாறும் இந்திய அணி – 59/3 (31)
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நான்காவது மட்டுமே இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே நடந்து முடிந்துள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2 மற்றும் இங்கிலாந்து ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.நேற்று இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கடந்த டெஸ்ட்டை போல ஆக்ரோஷமாக வீசினர்.அக்ஸர் 4 விக்கெட்டும், அஸ்வின் 3 மற்றும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.நேற்று முதல் நாள் ஆட்டத்தில் களம் இறங்கிய இந்திய அணி 24/1 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து முதல் நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது.
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் புஜாரா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்பு களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 8 பந்துகள் சந்தித்த நிலையில் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் பென் ஃபோக்ஸ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் இந்திய அணி 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது