கடந்த முறை என்ன சொன்னார்களோ அதை தான் இப்போதும் சொன்னார்கள்- மல்லை சத்யா..!
அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு திமுக மீண்டும் அழைக்கும் என்று மல்லை சத்யா தெரிவித்தார்.
திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில், இன்று 2-ம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தேர்தல் பணிச் செயலர் அந்திரிதாஸ் மற்றும் சின்னப்பா, செந்தில் அதிபன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன் பேசிய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மல்லை சத்யா, அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு திமுக மீண்டும் அழைக்கும் என்று தெரிவித்தார். கடந்த பேச்சு வார்த்தையின்போது திமுக தரப்பில் என்ன சொன்னார்களோ அதை தான் இப்போதும் சொன்னார்கள். மதிமுகவுக்கானஅங்கீகாரத்தை தரவேண்டுமென திமுகவிடம் கேட்டுள்ளோம் என தெரிவித்தார்.