விரைவில் முடிவு., மீண்டும் அதிமுகவுடன் பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை.!
அதிமுகாவுடனான தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை கட்சி அலுவலகத்தில் பாஜக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
அதிமுக கூட்டணியில் பாஜக கடந்த சில நாட்களாக தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதிமுக – பாஜக இடையே சுலபமான முடிவு எட்டப்படவில்லை, தொடர்ந்து இழுபறியில் இருந்து வருகிறது.
இந்நிலையில், அதிமுகாவுடனான தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாஜக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கிஷன் ரெட்டி, சிடி ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் எல் முருகன் உள்ளிட்டோர் கூட்டாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 24 முதல் 26 வரை சட்டப்பேரவை தொகுதிகளுடன், கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் வழங்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முடிவு விரைவில் இறுதி செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.