ஐயோ பாவும் ! பொய்யான பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறையிலிருந்தவர் விடுதலை

Default Image

கற்பழிப்பு குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து 20 ஆண்டுகள் சிறையில் கழித்த விஷ்ணு திவாரி என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

லலித்பூர் கிராமத்தில் வசிக்கும் திவாரி, 2000 ஆம் ஆண்டில் தனது இடத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள சிலவன் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

பாலியல் பலாத்காரம், பாலியல் சுரண்டல், இந்திய தண்டனைச் சட்டத்தை (ஐபிசி) குற்றவியல் மிரட்டல் மற்றும் எஸ்சி / எஸ்டி (அட்டூழியங்களைத் தடுக்கும்) சட்டத்தின் பிற பிரிவுகளில் இந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணை நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என குற்றச்சாட்டப்பட்டு  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

2005 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்தார்.ஆனால் திவாரிக்கு மற்றொரு அடி ஏற்பட்டது அவரது தந்தை இறந்ததன் விளைவாக சிறையில் இருந்து வெளிவர முடியாமல் தவித்தார்.

பின்னர் சிறை அதிகாரிகள் 2020 ல் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மாநில சட்ட சேவை அதிகாரத்தை அணுகினர்.நீதிமன்றம் தனது தீர்ப்பில் எஃப்.ஐ.ஆரில் 3 நாட்கள் தாமதம் இருப்பதைக் கவனித்தது

பாதிக்கப்பட்டவரின் தனிப்பட்ட பகுதிகளில் எந்த காயங்களும் இல்லை மற்றும் நில தகராறு தொடர்பாகவே இவர் மீது தவறாக  குற்றச்சாட்டப்பட்டுள்ளது என்று கூறி அவரை விடுதலை செய்துள்ளது.

ஒரு தவறான கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டதால்  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டபோது திவாரிக்கு 23 வயது.அவர் கம்பிகளுக்கு பின்னால் இருந்தபோது குடும்பத்தையும் அனைத்தையும் இழந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்