24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு .!

Default Image

தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ்  தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தமிழகம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தொகுதி வாரியாக கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ்  தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் தொடர்பான புகார்களை 18004257012 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும், வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார். சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்களை 18004256669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம்  பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்