பதாய் ஹோ ரீமேக்: மீண்டும் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை.!
பதாய் ஹோ என்ற பாலிவுட் படத்தின் ரீமேக்கில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றிக்கு பின் ஆர்ஜே பாலாஜி அடுத்ததாக ‘பதாய் ஹோ’ என்ற இந்தி திரைப்படத்தின் ரீமேக்கை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு முழுக்க காமெடி படமாக உருவாகி ரூ.220 கோடி வரை வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் தான் ‘பதாய் ஹோ’. இந்த பாலிவுட் படத்தினை தமிழில் இயக்குவதுடன் அதில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பாலாஜி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
மேலும் அவரது தந்தை கதாபாத்திரத்தில் சத்யராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ,அதனுடன் இந்த படத்திற்கு ‘வீட்ல விஷேசங்க’ என்று பெயரிட உள்ளதாகவும் கூறப்பட்டது.இந்த நிலையில் தற்போது ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் ஆர்ஜே பாலாஜி அடுத்ததாக இயக்கி நடிக்கும் படத்தில் பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே இவர் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக எல்கேஜி எனும் படத்தில் நடித்ததும்,அது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.