அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் குஷ்பூ…!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், குஷ்பூ கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வண்ணமாக அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உட்பட பல அரசியல் பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். இந்நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், குஷ்பூ கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.