கட்சி எதை ஒதுக்கினாலும் நிற்பேன்…! நான் எதற்கும் தயார்…! – அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரையின் 4 தொகுதிகளிலும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன். கட்சி எதை ஒதுக்கினாலும் நிற்பேன். நான் எதற்கும் தயார்.
அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள், நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள்? என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், மதுரையின் 4 தொகுதிகளிலும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன். கட்சி எதை ஒதுக்கினாலும் நிற்பேன். நான் எதற்கும் தயார் என அதிரடியாக பதிலளித்துள்ளார்.
மேலும் அவரிடம், அமமுகவை இணைக்க, பாக்க சார்பில் அழுத்தம் கொடுக்கபடுவது குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், அதிமுக – அமமுக இணைவு குறித்த கேள்விக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது. தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படும் தொண்டனாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025