வெற்றிகரமாக 50 நாட்களை கடந்த மாஸ்டர்… ட்விட்டரில் ரசிகர்கள் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்..!
மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் ஆனதால் விஜய் ரசிகர்கள் #MASTERBlockBuster50Days என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கோரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 % இருக்ககைகளுடன் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படம் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாட்களிலே மாஸ்டர் படம் நல்ல வசூல் செய்து சாதனை படைத்தது. அதுமட்டுமில்லாமல் திரையரங்குகள் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. இதனால் விஜய்யை வசூல் சர்க்கரவர்தி என்று கூறினார்கள். அதற்கு பிறகு வெளியான சில நாட்கள் கழித்து அமேசான் பிரேமிலும் வெளியானது.
இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகி வெற்றி கரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதனால் தற்போது இதனை விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் ட்வீட்டரில் #MASTERBlockBuster50Days என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.