2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “பண்டாரத்தி புராணம்” பாடல்..!
கர்ணன் படத்திலிருந்து நேற்று வெளியான பண்டாரத்தி புராணம் யூடியூபில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்திலிருந்து முதல் பாடலான கண்டா வரச்சொல்லுங்க பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று படத்திலிருந்து வெளியான பண்டாரத்தி புராணம் என்ற பாடல் வெளியானது. வெளியாக்க தற்போது யூடியூபில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
Thanks for the Love ❤️#பண்டாரத்திபுராணம் song from @dhanushkraja#Karnan is trending ???? No 1⃣ with a massive 2⃣ million+ views on @YouTubeIndia https://t.co/rA0y4YMgiy
A @Music_Santhosh Special! #PandarathiPuranam @mari_selvaraj @theVcreations#Deva @YugabhaarathiYb #Reetha pic.twitter.com/tTaX2VASZ5
— Think Music (@thinkmusicindia) March 3, 2021