புதுச்சேரியிலும் 9,10,11 வகுப்பு தேர்வு ரத்தாகுமா? – ஆளுநர் தமிழிசை ஆலோசனை
தமிழகம் போன்று புதுச்சேரியிலும் 9, 10, 11ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 9, 10, 11ம் வகுப்பு மாணர்வகள் பொதுதேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை விதி எண் 110ன் கீழ் முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் பொதுதேர்வின்றி தேர்ச்சி என்பதற்கான முழு வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் ராசு வெளியிடும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகம் போன்று புதுச்சேரியிலும் 9, 10, 11ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தேர்வுகளை ரத்து செய்வது பற்றி பெற்றோர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளை முழு நேரமும் செயல்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது என கூறப்படுகிறது.