‘வலிமை’ மோஷன் போஸ்டரை பார்த்து விட்டு தல அஜித் என்ன கூறினார் தெரியுமா.?
வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாகவும் ,அதனை பார்த்து தல அஜித் சூப்பராக இருப்பதாக கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை .இதனால் தல ரசிகர்கள் அப்டேட் எப்போது என்று கேட்டு வருகின்றனர்.விரைவில் வலிமை அப்டேட் வெளிவரும் என்று காத்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வெளியாகியுள்ளது.அதாவது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாகவும், அதனை தல அஜித் பார்த்து விட்டு சூப்பராக இருக்கிறது என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் நான் வெளியிட கூறும் நேரத்தில் மோஷன் போஸ்டர் வெளியிட்டால் போதும் என்றும் ,அதுவரை பொறுத்திருங்கள் என்றும் தல அஜித் படக்குழுவினரிடம் கேட்டு கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனவே விரைவில் வலிமை படத்தின் அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது தல ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.