கூகிள் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம் ‘Talk to Books’..!
கூகுள் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி பல்வேறு மக்களுக்கு கூகுள் நிறுவனத்தின் சேவை மிகவும் உதவியாக உள்ளது. குறிப்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது கூகுள் நிறுவனம்.
தற்சமயம் கூகுள் நிறுவனம் ‘Talk to Books‘ என்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது அனைத்து பயனர்களுக்கும் மிகவும் உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் ஆராய்ச்சி பிரிவு, சொற்பொருள் அனுபவங்களை பரப்பியுள்ளது,இது வலைத்தளங்கள், எப்படி பேசுவதென்பதை விளக்கும்திறனை வெளிப்படுத்தும் சுவாரஸ்யமான செயற்பாடுகளாகும்.
அனுபவத்தில், பயனர்கள் வெறுமனே ஒரு அறிக்கையோ அல்லது ஒரு கேள்வியையோ கூகுள் மூலம் தட்டச்சு செய்யலாம், மேலும் தட்டச்சு செய்தவை தொடர்பான புத்தகங்களில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் மூலம் முழு வாக்கியங்களையும் காணலாம்.
உதாரணமாக, நீங்கள் கூகுள் பக்கத்தில் “உலகில் சிறந்த துப்பறிவாளன்” என்று தட்டினால், ஏராளமான பத்திகள் மற்றும் சொற்றொடர்கள் “டிடெக்டிவ்” என்ற வார்த்தையுடன் தொடர்புபடுத்துகிறது. ஒரு “பில்லியன் உரையாடல்கள் போன்ற ஜோடி வாக்கியங்களை” அளிப்பதன் மூலம் அதன் AI-ல் உருவாக்கியுள்ளனர்.
குறிப்பாக இந்த வழியில் பயனர்கள் சிறிது ஞாபகம் வைத்திருக்கும் புத்தகங்களிலிருந்து சரியான வரிகளைக் காணலாம். இந்த வழியில் பயனர்கள் சிறிது ஞாபகம் வைத்திருக்கும் புத்தகங்களிலிருந்து சரியான வரிகளைக் காணலாம். மேலும் இன்றைய மாணவர்களுக்கு பெரிதும் உதவியாய் இந்த’Talk to Books’ வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை அறிவுத்திறன் என்பது கணினி அல்லது இயந்திரங்கள் ஆகியனவற்றை வைத்துக்கொண்டு நுண் அறிவை உருவக்குகின்ற முறை ஆகும். மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணிப்பொறிகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கம். கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை தெரிவித்தது என்னவென்றால், செயற்கை நுண்ணறிவு அம்சம் அனைத்து மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.