ஸ்டாலின் தான் வர்றாரு, விடியல் தர போறாரு விளம்பரம் – திமுகவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்.!
ஸ்டாலின் தான் வர்றாரு, விடியல் தர போறாரு என்ற விளம்பர பதாகை வைக்க விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
ஸ்டாலின் தான் வர்றாரு, விடியல் தர போறாரு என்ற விளம்பர பதாகை வைப்பதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. விளம்பரம் தொடர்பான உண்மை தன்மை அனைத்திற்கும் அந்த விளம்பரத்தை வெளியிடுபவர் தான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
கடைகளில் விளம்பர பதாகை வைக்க மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் விளம்பர பதாகை வைப்பது குறித்து அந்த பகுதி மாவட்ட அதிகாரி முடிவு செய்வார்கள் எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. விளம்பர பதாகை வைப்பது தொடர்பான செலவுகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும் என திமுகவின் கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்துள்ளார்.