#BREAKING: அதிமுக விருப்ப மனுக்கள் அவகாசம் குறைப்பு..!
அதிமுகவில் விருப்பமனு அளிக்க மார்ச் 5 வரை அவகாசம் அளித்திருந்தநிலையில் மார்ச் 3 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி அதிமுக விருப்ப மனுக்களை வழங்க தொடங்கியது. விருப்பமனுக்கள் மார்ச் 5-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், மார்ச் 5-ஆம் தேதி வரை வழங்கப்பட்ட கால அவகாசம் வரும் 3-ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வரும் 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே விருப்பமனுக்கள் பெறப்படும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.