#BREAKING: ராஜேஷ் தாஸ் விவகாரம்.. விசாரணை அதிகாரி மாற்றம்..!
ராஜேஷ் தாஸ் விவகாரத்தை விசாரிக்க ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மாற்றப்பட்டு சிபிஎஸ்டி எஸ்பி முத்தரசி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பியாக இருக்கக்கூடிய ராஜேஷ் தாஸ் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி அந்த பெண் எஸ்.பி டி.ஜி.பி மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார். பெண் ஐ.பி.ஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, 6 பேர் கொண்ட குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்திருந்தது. இதையடுத்து, சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக திரிபாதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனால், இன்று காலை டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான புகாரை விசாரிக்க விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரிக்க நியமிக்கப்பட்ட சிபிசிஐடி அதிகாரி மாற்றப்பட்டார். ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மாற்றப்பட்டு சிபிஎஸ்டி எஸ்பி முத்தரசி நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான புகாரை இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.