பிரதமர் மோடியை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு…!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸை தடுக்க தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் கோவீஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த தடுப்பூசிகள் இதுவரை ஒரு கோடிக்கும் மேலானோருக்கு போடப்பட்டுள்ள நிலையில், 2-வது கட்டமாக இன்று முதல் 60 வயதை கடந்தவர்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு வகையான இணை நோய் உள்ளவர்களுக்கும் இந்த தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவருக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளார்.