ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி.!புதிய அம்சங்களுடன் வெளிவரும் ஐபோன் எக்ஸ்(iphone x)..!
இந்தியாவில் ஐபோன் எக்ஸ்(iphone x) சாதனம் மிகவும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது,அதன்படிஇதுவரை கருப்பு நிறத்தில் வந்த ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போன் விரைவில் தங்க நிறத்தில் இந்த ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒஎல்இடி பேனல் மற்றும் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் இந்த ஐபோன் எக்ஸ் சாதனம் வெளிவருதால் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இப்போது வெளிவரும் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஐபோன் எக்ஸ் வடிவமைப்பை கொண்டு வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் ஐபோன் முகத்தை ஸ்கேன் செய்வதில் மிக துல்லியமாக விளங்கும் நிலையில் இன்னும் அந்த இடத்தை சாம்சங் பிடிக்க இயலாத நிலை தான் உள்ளது. எனவே சாம்சங் ஒரு தலைமுறை பின்னடைவில் இருப்பதாகவே கருதப்படுகிறது. ஐபோன் எக்ஸ் சாதனத்தின் வடிவமைப்பை பொறுத்தமட்டில் துருப்பிடிக்காத ஸ்டீல் மற்றும் கண்ணாடி ஆகியவற்றால் உருவாக்கம் பெற்றுள்ளது. இந்த புதிய சாதனம் இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் – வெள்ளி மற்றும் கிரே.
இது சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் 2436×1125 மற்றும் 458பிபிஐ என்ற திரை தீர்மானம் கொண்ட 5.8 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளது. அகச்சிவப்பு கேமரா, ஸ்பீக்கர், மைக்ரோஃபோன் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ட்ரூ டெப்த் கேமரா அமைப்புடன் வரும் ஐபோன் எக்ஸ் ஒரு 64-பிட் செயலி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.
எப்/1.8என்ற பரந்தகோண லென்ஸ் மற்றும் இரட்டை தொனியில் ஃப்ளாஷ் கொண்ட முதன்மை 12 மெகாபிக்சல் கேமரா ஒன்றும் மற்றும் எப்/2.4 துளை மற்றும் ஒரு டெலிஃபோட்டோ லென்ஸைப் பயன்படுத்தும் இரண்டாம் நிலை பின்புற கேமராவும் கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், இக்கருவி எப்/2.2 லென்ஸ் கொண்ட ஒரு 7 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த சாதனத்தில் சேமிக்கப்படும் முகத்தரவுகள் ஆனது ஏ11 பயோனிக் சில் கொண்டு பாதுகாக்கப்படும். இந்த பேஸ்ஐடி அம்சம் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மற்றும் ஆப்பிள் பே உடன் இணைந்து செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.