#BREAKING: புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா.!

புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுப்பியுள்ளார் சிவக்கொழுந்து. சிவக்கொழுந்தின் சகோதரர் ராமலிங்கம் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, புதுச்சேரியில் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால், நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தது. இதன்பின் புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தற்போது சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025