வலிமை படத்தின் அட்டகாசமான அப்டேட்..!

Default Image

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் இன்று வெளியாகவுள்ளது. 

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் பல பிரபலங்களிடமும் அப்டேட் கேட்டு வந்தனர். இதனை கண்டித்து தல அஜித் வெளியிட்ட அறிக்கையில் சரியான நேரத்தில் வலிமை அப்டேட் வெளிவரும் என்றும், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் வலிமை அப்டேட் எப்போது வெளிவரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள். இந்த நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் இன்று வெளியாகவுள்ளதாக தகவல்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்