தன் அதிகாரத்தை மாநில தேர்தலுக்காக மத்திய அரசு தவறாக பயன்படுத்தக்கூடாது – மம்தா பானர்ஜி!

Default Image

நடைபெற உள்ள மாநில தேர்தல்களுக்காக மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.

எட்டு கட்டங்களாக மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 29 ஆம் தேதி வரையிலும் நடைபெற கூடிய இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இரண்டாம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என நேற்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பேசியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் முடிவை தான் மதிப்பதாகவும், ஆனால் ஏன் மாவட்டங்களைப் பிரிகிறீர்கள் எனவும் கேட்டுள்ளார்.

அத்துடன், தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள தெற்கு பர்கானாஸ் மாவட்டம் எங்கள் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள இடம். இந்த இடத்தில் மூன்று கட்டமாக பிரிக்கப்பட்டது பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா அவர்களின் வசதிக்காகவா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவ்வாறு செய்தால் அது தவறு எனவும், மாநில தேர்தலுக்காக மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாங்கள் சாதாரண மக்களாக இருந்தாலும், எங்கள் களத்தில் நாங்கள் போராடுவோம் எனவும், பணம் தவறாக பயன்படுத்தப்படுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் ஆணையம் தங்கள் சொந்த மாநிலமாக மேற்கு வங்காளத்தை நினைக்க வேண்டுமே தவிர, பாஜகவின் கண்களிலிருந்து பார்க்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்