#BREAKING: புதிய கட்சியை தொடங்கிய அர்ஜுன மூர்த்தி.. ரஜினி வாழ்த்து..!
இன்று தனி அரசியல் கட்சி துவங்கியிருக்கும் திரு.அர்ஜுன மூர்த்தி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள் என ரஜினி தெரிவித்துள்ளார்.
இன்று அர்ஜுன மூர்த்தி “இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி” என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இந்நிலையில், “இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி” என்ற புதிய கட்சியை தொடங்கி அர்ஜுன மூர்த்திக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் நாஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தனி அரசியல் கட்சி துவங்கியிருக்கும் திரு.அர்ஜுன மூர்த்தி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். அர்ஜுன மூர்த்தி ரஜினியின் தொடங்கப்படாத கட்சியில் பணியாற்றியவர் பாஜக முன்னாள் நிர்வாகி ஆவார்.