கமல் படத்தில் நடிக்க மறுத்த அரவிந்த் சாமி.! அதுவும் இந்த 2 ஹிட் படங்களில்.!
கமலின் தெனாலி மற்றும் அன்பே சிவம் ஆகிய படங்களில் அரவிந்த் சாமி நடிக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் ரசிகர்களின் காதல் மன்னனாக வலம் வந்தவர் அரவிந்த் சாமி .அதனை தொடர்ந்து சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்த இவர் அடுத்து தனி ஒருவன் படத்தில் நடித்ததன் மூலம் ரீ என்டரி கொடுத்தார் .அந்த படம் இவருக்கு பெரிய கம்பேக்காக இருந்தது . அந்தளவுக்கு ரசிகர்கள் மனதில் வில்லனாக இடம் பிடித்து மெகா ஹிட் அடித்தது.தற்போது தலைவி, நரகாசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் அரவிந்த் சாமி தமிழ் சினிமாவின் உலகநாயகனாக திகழும் கமல்ஹாசனின் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது கமலின் தெனாலி படத்தில் ஜெயராம் நடித்த கதாபாத்திரத்திலும், அன்பே சிவம் படத்தில் மாதவன் கதாபாத்திரத்திலும் நடிக்க அரவிந்த் சாமியிடம் தான் முதலில் பேசப்பட்டதாம்.ஆனால் அப்போது அரவிந்த் சாமி கமலின் இந்த இரண்டு பட வாய்ப்புகளையும் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.